The Bible Way to Heaven (Tamil)

Video

June 3, 2015

வேதாகமம் இரட்சிப்பைக் குறித்து, உண்மையில் தெளிவாக உள்ளது. இது நீங்கள் எவ்வளவு நல்லவர் என்பதை அடிப்படையாகக் கொண்டதல்ல. நிறைய மக்கள் தங்களை மிகவும் நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டு, பரலோகம் அடையப் போவதாக எண்ணுகின்றனர். ஏனென்றால் அவர்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் வேதம் கூறுகிறது “ எல்லோரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களாகி” (ரோமர்3:23) வேதம் கூறுகிறது. “அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை”. (ரோமர்3:10) நான் நீதிமான் அல்ல. நீங்களும் நீதிமான் அல்ல. நம்முடைய நன்மை நம்மைப் பரலோகத்துக்குள் கொண்டு செல்லுமானால், ஒருவரும் பரலோகம் போக முடியாது. வேதம் இன்னும் சொல்கிறது வெளி. 21:8ல் “பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும, விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவர்கள்,” என்று. முன்பு, நான் பொய் சொல்லி இருக்கிறேன். எல்லாருமே முன்பு பொய் சொன்னார்கள். அதனால் எல்லாரும் பாவஞ் செய்திருக்கிறோம். பொய்யை விட மோசமான காரியங்களைச் செய்திருக்கிறோம். இப்போது நாம் எதிர்கொள்வோம். நாம் நரகத்திற்குப் பாத்திரர்கள். ஆனால் வேதம் சொல்கிறது. ரோமர் 5:8ல் “நாம் பாவிகளாயிருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறார்”. அவர் நம்மை நேசித்தபடியால் இவ்வுலகத்திற்கு வந்தார்.

வேதம் அவரை மாம்சத்தில் வெளிப்பட்ட தெய்வம் என்று கூறுகிறது. கடவுள், அடிப்படையாய் மனித ரூபமெடுத்தார். பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்தார். அவர் எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனாலும் அவர்கள் அவரை அடித்தனர். அவர்மேல் துப்பினர். சிலுவையில் ஆணியடித்தனர். வேதம் சொல்கிறது “அவர்தாமே தமது சரீரத்திலே தம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் வைத்தார்”. (1பேதுரு 2:24) ஆதலால் இதுவரை நீங்கள் செய்த ஒவ்வொரு பாவமும், இதுவரை நான் செய்த ஒவ்வொரு பாவமும், இயேசு அந்தப் பாவத்தைச் செய்தது போலாயிற்று. நம் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார். அவர் மரித்தபோது அவர்கள் அவர் சரீரத்தை எடுத்து, அவரைக் கல்லறையில் வைத்து, அவர் ஆத்துமா மூன்றுநாள் இரவும் பகலும் பாதாளத்திற்குச் சென்றது (அப் 2:31) அவர் மூன்று தினங்களுக்குப் பிறகு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவராய், சீஷர்களுக்குக் கைகளிலிருந்த காயத்தைக் காட்டினார். வேதம், நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் மரித்தாரென்று தெளிவாகக் கூறுகிறது. “நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்”. (1யோவான் 2:2)

ஆனால் நாம் இரட்சிப்படைய ஒரு காரியம் செய்ய வேண்டியதிருக்கிறது. வேதாகமத்தில் அப்போஸ்தலர் 16ஆம் அதிகாரத்தில் அந்தக் கேள்வி இருக்கிறது. “இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று அவர்கள் கூறினார்கள. அவ்வளவுதான். “ஒரு சபையில் சேர்ந்துகொள்: அப்பொழுது இரட்சிக்கப்படுவாய் என்றோ ஞானஸ்நானம் பெற்றுக்கொள்: அப்பொழுது இரட்சிக்கப்படுவாய் என்றோ சொல்லவில்லை. நல்ல வாழ்க்கை வாழு, அப்பொழுது இரட்சிக்கப்படுவாய், என்றோ சொல்லவில்லை. எல்லாப் பாவங்களுக்கும் மனஸ்தாபப்படு, அப்பொழுது இரட்சிக்கப்படுவாய் என்றோ, சொல்லவில்லை, இல்லை. அவர், “விசுவாசி” என்று சொன்னார்.

முழு வேதாகமத்திலும், புகழ்பெற்றவசனத்தை, மேற்கோளாக ‘இன் அவுட்பர்கர்” என்னும் இடத்தில், கோப்பையின் அடிப்புறம் எழுதப்பட்டிருந்தது. அது மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொருவரும் அதைப்பற்றி கேள்விப்பட்டதுதான். யோவான் 3:16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. நித்தியம, என்பது நித்தியம் ஆகும். எனறும் அழியாது” என்ற பொருள்படும். இயேசு கூறினார்.

“நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை. அவைகளை ஒருவனும் என்கையிலிருந்து பறித்துக் கொள்வதில்லை”. (யோவான் 10:28) வேதாகமம் யோவான் 6:47-ல், “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று, மெய்யாகவே மெய்யாவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

ஆதலால் இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்தால், உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று வேதம் சொல்கிறது. நீங்கள் என்றென்றும் வாழப்போவீர்கள். உங்கள் இரட்சிப்பை இழக்கமாட்டீர்கள். அது நித்தியமானது. அது என்றும் அழியாதது. ஒருமுறை உங்கள் விசுவாசத்தை அவர் மேல் வைத்தால் என்றென்றும் இரட்சிக்கபட்டவர்கள். எதுவாயினும் நீங்கள் உங்கள் இரட்சிப்பை இழக்கமாட்டீர்கள். நான் வெளியில்போய் மோசமான பாவம் எதுவும் செய்தால் கூட, அதற்காக கர்த்தர் இந்தப்பூமியில் என்னைத் தண்டிப்பார். இன்று நான் வெளியேபோய் யாரையாவது கொன்றால், கண்டிப்பாக கடவுள் எனக்கு, தண்டனை கிடைக்கச்செய்வார். நான் சிறைக்குச் செல்லலாம். அல்லது அதைவிடமோசமான மரணதண்டனை கிடைக்கும்.

எப்படியும் இந்த உலகம் என்னைத் தண்டிக்கும் அதற்கு அதிகமாக கடவுள் நிச்சயமாய் தண்டனை கொடுப்பார். ஆனால் நான் நரகத்துக்குப்போக மாட்டேன். பாதாளத்துக்குப்போக நான் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். நான் நரகத்துக்குப் போனால் கர்த்தர் கூறியது பொய்யாகிவிடும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவர் சொன்னார் “யார் என்னில் ஜீவித்து என்னை விசுவாசிக்கிறவன் சாகமாட்டான்” என்று.

அதனால் தான், வேதத்தில் உண்மையாக மோசமான செயல்களைச் செய்துவிட்டு பரலோகம் சென்ற, நிறைய மக்களின் உதாரணங்கள் இருக்கிறது. எப்படி அவர்கள் மிக நல்லவர்களாக இருந்ததாலா? இல்லை. அவர்கள் தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்ததால் தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. பிறமக்கள், உலகின் கண்களுக்கு இன்னும் மேலான வாழ்வு வாழ்ந்ததாகத் தெரியலாம். உண்மையிலே அவர்கள் மேம்பட்டும் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைக்கவில்லையென்றால், அவர்கள் தாங்கள் பாவங்களுக்குத் தண்டனையான நரகத்திற்குப் போவார்கள்.

இந்த ஒரு சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒருவிஷயத்தில் இன்று நான் நிச்சயமாக ஒருகாரியத்தைக் கொண்டு வரப்போகிறேன். அது இயேசு கிறிஸ்துவிடம் சீஷர்களில் ஒருவன் கேட்ட கேள்வி இருக்கிறது. அது இந்தக் கேள்வி. சிலர் இரட்சிக்கப்பட்டவர்களா? நல்ல கேள்விதான். சரியா? நிறைய மக்கள் இரட்சிக்கப்பட்டனரா? அல்லது சிலர் இரட்சிக்கப்பட்டனரா? யார் இங்கு நினைக்கிறார்கள் நிறைய பேர் பரலோகம் போகிறார்கள் என்று? இந்த உலகில் நிறைய பேர் பரலோகம் செல்கின்றனரா?

விடையை யூகித்து கொள்ளுங்கள். மத்தேயு7ல் அவர் கூறினார்.

“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள் கேட்டுக்குப் போகிற வாசல்விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக்கண்டு பிடிக்கிறவர் சிலர்”. (மத்தேயு7:13-14)

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகராஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி, கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவன், அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, “கர்த்தாவே, கர்த்தாவே, உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா”? என்பார்கள். அப்பொழுது “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.” (மத்தேயு7:21-23)

முதலாவதாக, இந்த உலகின் பெரும்பான்மையான மக்கள் இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்க, கேட்க கூடச் செய்யவில்லை. இந்த வகுப்பறையின் பெரும்பான்மையினர் இயேசுவின் மீது விசுவாசம் வைக்க கேட்டதற்காக நன்றி. ஆனால் உலகின் பெரும்பான்மையினர் இயேசுவின் மீது விசுவாசம் வைக்க கேட்க வில்லை. ஆனால் இயேசு மீது விசுவாசம் வைத்தவர்களிலும், அவரை “கர்த்தாவே என்றழைத்து, நிறையபேர் உங்கள் நாமத்திலே அற்புதங்களை நடப்பித்தோமே நாங்கள் ஏன் இரட்சிக்கப்படவில்லை” என்று கேட்பவர்களைக் குறித்து எச்சரிக்கிறார். ஆனால் அவரே, “என்னை விட்டு அகன்று போங்கள். உங்களை அறியேன்.” என்பார்.

இரட்சிப்பு செயல்களைப் பொறுத்து ஏற்படுவதில்லை. நீங்கள் உங்கள் இரட்சிப்புக்கு, சொந்த கிரியைகளை நம்பினீர்களானால், ஞானஸ்நானம் எடுத்தால் பரலோகம் போக முடியுமென்று நினைத்தீர்களானால், “ஒரு நல்ல வாழ்க்கை வாழலாம், கற்பனைகளைக் கைக்-கொள்ளுவதன் மூலம் இரட்சிப்படையலாம, என்று எண்ணலாம். நீங்கள் ஆலயத்துக்குப் போகலாம், என்று நினைக்கலாம். உங்கள் பாவங்களை விட்டுத்திரும்ப வேண்டுமென்று நினைக்கிறீர்கள்...” உங்கள் சொந்த கிரியைகளில் நம்பிக்கை வைப்பீர்களானால், இயேசு ஒருநாள் உங்களிடம் “என்னை விட்டு அகன்று போங்கள். நான் உங்களை அறியேன்” என்று சொல்வார்.

அவர் செய்ததில் நீங்கள் முழுவிசுவாசம் வைக்க வேண்டும். உங்களுக்காக சிலுவையிலறையப்பட்டதையும், மரித்ததையும், அடக்கம் பண்ணப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்ததையும், விசுவாசிக்க வேண்டும். அது பரலோகம் செல்வதற்குரிய நுழைவுசீட்டு. நீங்கள் மற்ற காரியங்களில் நம்பிக்கை வைத்து நான் நல்லகிறிஸ்தவன், இந்த அற்புதமான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறேன். நான் பரலோகம் போகவேண்டும் என்று சொல்வீர்களானால், அவர் “என்னைவிட்டு புறப்பட்டுப் போங்கள், உங்களை அறியேன்” என்று சொன்னதைக் கவனிக்க வேண்டும். அவர் உங்களை நான் அறிவேன் என்று சொல்லவில்லை. ஒருமுறை அவர் அறிந்தாரென்றால், அது நித்தியத்துக்கும் என்றென்றைக்குமாகும், என்று நான் முன்பே கூறியதை நினைவில் கொள்ளுங்கள். ஒருமுறை அறிந்தாரென்றால் என்றும் நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்கள். அவர் உங்களை அறியேன், என்று சொல்வார். ஏனென்றால் அவர் அறியவில்லையாதலால் நீங்கள் நரகத்துக்குப் போவீர்கள். ஒருமுறை உங்களை அறிந்தால் உங்களை அறிவார். என் பிள்ளைகள் எப்போதும் என் பிள்ளைகளாயிருப்பது போல, ஒருமுறை மறுபிறப்படைந்து அவர் பிள்ளையாயிருப்பது, என்றும் அவர் பிள்ளையாயிருப்பீர்கள். நீங்கள் குடும்பத்தில் கறுப்பு ஆடாக இருக்கலாம். இந்தப் பூமியில் கர்த்தரால் அதிகமாக ஒழுக்கத்துக்குள் கொண்டு வரப்பட்ட யாரோவாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையை இந்த உலகில் அழித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இரட்சிப்பை அழிக்கமுடியாது. ஒருமுறை இரட்சிக்கப்பட்டாயிற்றென்றால், அது முடிந்துபோன ஒப்பந்தம். அது நான் விரும்பும் முக்கிய விஷயமாக, கடைசி நேரத்தில் கூற விரும்புகிறேன். இரட்சிப்போ அல்லது கடைசி நேரங்கள் பற்றிய கேள்விகளுக்காக சில நிமிடங்கள் எடுத்துக் கொள்வோம்.

1. நீங்கள் ஒரு பாவி என்று ஒத்துக்கொள்ளுங்கள்.
2. பாவத்திற்குத் தண்டைனையை உணருங்கள்.
3. இயேசு உங்களுக்காக மரித்தார் - அடக்கம் பண்ணப்பட்டார் மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று நம்புங்கள்.
4. உங்கள் இரட்சகராக கிறிஸ்துவை மட்டும் நம்புங்கள்.

அன்பார்ந்த இயேசுவே! நான் ஒரு பாவி என்று உணர்கிறேன் நான் நரகத்திற்குப் போக பாத்திரன் என்று நான் அறிவேன். ஆனால் சிலுவையில் எனக்காக மரித்து, உயிர்த்தெழுந்தீர் என்று நம்புகிறேன். இப்போதே என்னை இரட்சித்து நித்திய ஜீவனை எனக்குத் தாரும். நான் உம்மை மட்டும் நம்புகிறேன். இயேசுவே ஆமென்.

 

 

 

mouseover